search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கூட்டம்"

    • சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
    • நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பொதுமக்கள் ஜவுளி எடுக்க வந்திருந்தனர். இதனால் சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ்நிலையம், பேர்லேண்ட்ஸ் பகுதி உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது.

    நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர். அதே போல் இன்று காலை முதலே ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் தீவிர ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கண்காணிப்பு

    மேலும் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

    நேரம் செல்ல, செல்ல இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் நகை கடைகள், இனிப்பு கடை களிலும் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. ஜவுளி எடுக்க வந்தவர்களால் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதியது. 

    ×